Posted in

தவெக பற்றி பேசிவிட்டேன்: கண்ணீர் விட்டு கதறி அழும் ஜூலி … என்ன ஆச்சு ?

தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஜூலி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த அநீதி குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்து கண்ணீர் மல்கப் பேட்டியளித்துள்ளார். தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய் மற்றும் தவெகவினர் குறித்துச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வந்ததால், அதற்கு எதிர்வினையாகத் தன் மீது திட்டமிட்டுக் கிட்னி திருட்டு மோசடி உள்ளிட்ட மிகக் கொடூரமான அவதூறுகள் பரப்பப்படுவதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையையும், கேரக்டரையும் சிதைக்கும் நோக்கில் யூடியூபர்கள் சிலர் செயல்படுவதாகக் கூறி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர வைத்துள்ளார் ஜூலி.

கடந்த மார்ச் மாதம் நெல்சன் மற்றும் கார்த்திக் குமார் உள்ளிட்ட 8 பேர் மீது மனித கடத்தல், உடல் உறுப்பு கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்ற பொய்க் குற்றச்சாட்டுகளைத் தன் மீது சுமத்தியதாகக் கூறி, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூலி புகார் அளித்திருந்தார். இந்தச் சூழலில், தற்போது டிவி கே (TVK) ஆட்சிக் காலத்தில் இந்த புகாருக்குக் காவல்துறையிடமிருந்து வந்துள்ள பதில் நோட்டீஸ் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜூலி கூறியுள்ளார். தனக்கு இது 3-வது கல்யாணம் என்று பரப்பப்படும் அவதூறுகள் கிரிமினல் அவதூறு இல்லை, அது சிவில் அவதூறு என்பதால் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது எனப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

காவல்துறை தரப்பில் தன்னிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படாமல், “நீ போய் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்” என்று அலட்சியமாகப் பதில் அளித்துள்ளதாக ஜூலி குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது தன் குழந்தையைக் குறித்துப் பேசியபோது உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுத ஜூலி, “ஒரு பொண்ணு தவெகவிற்கு எதிராகப் பேசிட்டான்ற ஒரே காரணத்துக்காக, அந்தப் பொண்ணோட கேரக்டரை அசிங்கப்படுத்திதான் எல்லாம் பண்ணனும்னா எனக்குச் சொல்றதுக்கு எதுவும் இல்லை” என்று தவெக வினரின் சைபர் தாக்குதல்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராம் மூலமாக இன்ஸ்டண்ட்டாக விஜய் அண்ணா முதலமைச்சர் (CM) ஆகிவிட்டதாகக் கொண்டாடும் அவரது ஆதரவாளர்கள், தங்களுக்கு எதிராகப் பேசுபவர்களை இன்ஸ்டண்ட்டாக இப்படித் தனிநபர் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஜூலி வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை நசுக்குவதை விட்டுவிட்டு, மக்களுக்கு ஏதாவது இன்ஸ்டண்ட்டாக நல்லது பண்ணா நல்லாருக்கும் என்று காரசாரமாகப் பேசியுள்ளார். டிவி கே ஆட்சியில் ஒரு பெண் தனக்கு நேர்ந்த அவதூறுக்கு நீதி கிடைக்காமல் கண்ணீர் வடித்திருக்கும் இந்தச் சம்பவம் தற்போதைய அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.