Posted in

20ம் திகதியே காணமல் போன HARD-DISC: தெரிந்தால் வெட்கக் கேடு என்று மறைத்த அமைச்சர் நிர்மல் குமார் !

 

கடந்த மே மாதம் 20ஆம் தேதியே மின்சார வாரியத்தில் இருந்து, ஹார்ட் டிஸ்க்குகள் (Hard-Discs) காணாமல் போயுள்ளன. இந்த அதிர்ச்சித் தகவலை 10 நாட்களுக்கும் மேலாக மறைத்துள்ளது ஆளும் டிவிFilter (TVK) அரசு. சொல்லப் போனால், இந்தத் தகவலை முதல் முறையாக ‘இந்தியா டுடே’ (India Today) ஊடகம் தான் வெளியிட்டது. இந்தச் செய்தி கசிந்த அதே நாள் (நேற்று) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது உண்மைதான், நாங்கள் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறோம் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், இவை காணாமல் போன உடனே புலனாய்வுப் பிரிவிடம் ஏன் உடனடியாகத் தெரிவிக்கவில்லை என்ற வலுவான கேள்விகள் எழுகின்றன. செய்தி ஊடகங்களில் வெளியான உடனே, சுமார் 10 நாட்கள் கழித்து மின்சார வாரியத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று அவசர அவசரமாகப் புகார் கொடுத்துள்ளார். செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால், “நாங்கள் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டோம்” என்று தப்பித்துக் கொள்வதற்காகவே இவ்வாறு நாடகமாடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால், இந்த விஷயமும் தற்போது பெரும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்த டிஸ்க்குகள் களவாடப்பட்ட விஷயம் முதலமைச்சருக்கு முன்கூட்டியே தெரியுமா என்பதே சந்தேகமாக உள்ளது. இதனை எளிதாகச் சமாளித்து விட முடியும் என்று அமைச்சர் நிர்மல்குமார் எண்ணி இருந்தால், அது மிகப்பெரிய தவறு. இந்த டிஸ்க்குகளை திமுகவின் செந்தில் பாலாஜியே ஆட்களை வைத்துத் திருடச் சொல்லி இருப்பார் என்பது அரசியல் வட்டாரங்களில் மிகவும் தெளிவாகப் புலப்படுகிறது.