தற்கொலை செய்துகொண்டு இறந்த “சுஷாந்த் சிங்” வீட்டில் குடியேறிய சிம்பு பட நடிகை!

தற்கொலை செய்துகொண்டு இறந்த “சுஷாந்த் சிங்” வீட்டில் குடியேறிய சிம்பு பட நடிகை!

திரைப் பின்பலம் எதுவுமே இல்லாமல் வாரிசு குடும்பத்தை சேர்ந்த நடிகராகவும் இல்லாமல் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி நட்சத்திர நடிகராக மிக குறுகிய காலத்திலேயே பிரபலமானவர் தான் சுஷாந்த் ராஜ்புட். இவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்து பாலிவுட் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்களில் நடித்த தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த பாலிவுட் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக பார்க்கப்பட்டார்.

இதனிடையே அவர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். இந்த திரைப்படம் இந்தியா அளவில் மாபெரும் வெற்றி திரைப்படமாக பார்க்கப்பட்டதோடு சுஷாந்த் சிங்கின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்ட கூடியதாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக அவருக்கு பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

இப்படியான சமயத்தில் அவரது வளர்ச்சியை பிடிக்காத சில பேர் அவரை அழிக்க நினைத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி மிகப்பெரிய அளவில் பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களின் சதி திட்டத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் பிரபல நடிகையான அடா சர்மா சுஷாந்தசிங் ராஜ்புட் வாழ்ந்து வந்த வீட்டில் தற்போது குடியேறி இருக்கிறார்.அங்கிருந்து அவர் எடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆக்கியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.