ஆத்தி இத்தனை கோடியா? சூப்பர்ஸ்டாரின் பங்களா விலை எவ்வளவு தெரியுமா?

ஆத்தி இத்தனை கோடியா? சூப்பர்ஸ்டாரின் பங்களா விலை எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ,நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். பல வருடங்களாக தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர கிட்டத்தட்ட 73 வயதிலும் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று வரை ரஜினியின் மவுஸ் கொஞ்சம் கூட குறையவே இல்லை. இவரது ஸ்டைலும் இவரது பாடி லாங்குவேஜ் இன்றுவரை அப்படியே தான் இருக்கிறது. 73 வயதாகியும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு அதிரடியான ஆக்சன் காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வருகிறார் .

தற்போது ரஜினிகாந்த் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார. இப்படத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மேலும் அடுத்ததாக ஜூன் 10ஆம் தேதி முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கூலி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்தது இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் போயஸ் கார்டனில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்டமான பங்களா வீட்டின் விலை கிட்டத்தட்ட ரூபாய் 35 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வீட்டில் தான் ரஜினிகாந்த் தீபாவளி பொங்கல் மற்றும் தன்னுடைய பிறந்தநாள் உள்ளிட்டவற்றில் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.