சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் தமிழக முதல்வர் விஜய் இடையேயான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் அனில் ரெட்டியின் மகள் ஷ்ரேயா ரெட்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதே நிகழ்ச்சியில் தொழிலதிபர் கௌதம் அதானியும் பங்கேற்ற நிலையில், இரு தலைவர்களும் நீண்ட நேரம் நேரில் சந்தித்துப் உரையாடினர்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.11,733 கோடி மதிப்பிலான வெளித்துறைமுக விரிவாக்க திட்டத்தை (Outer Harbour Project) அமைப்பதற்கான ஏலத்தில் அதானி குழுமம் உட்பட 3 நிறுவனங்கள் களத்தில் உள்ளன. இந்தச் சூழலில் அதானி மற்றும் முதல்வர் விஜய் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. துறைமுகம், மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் அதானி குழுமம் கவனம் செலுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பான பேச்சுகள் எழுந்திருக்கலாம் எனத் தொழில் வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்த ரகசிய மற்றும் நட்புரீதியிலான சந்திப்பு அரசியல் மற்றும் வணிக வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மெகா துறைமுக திட்டத்திற்கான டெண்டர் நடைமுறைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசின் அடுத்தகட்ட நகர்வுகள் விரைவில் தெரியவரும்.