பிரம்மாண்டமாக நடந்து முடிந்த அர்ஜுன் மகள் திருமணம் – வைரல் புகைப்படம் இதோ!

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த அர்ஜுன் மகள் திருமணம் – வைரல் புகைப்படம் இதோ!

90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வளர்ந்து வந்தவர் தான் நடிகர் அர்ஜுன். மைசூரை சொந்த ஊராக கொண்ட இவர் தமிழ் சினிமாவில் முதல்வன், அண்ணனுக்கு ஜே, எங்கள் குரல், என் தங்கை, மனைவி ஒரு மாணிக்கம், சுதந்திரம், பாட்டாளி மகன், வந்தே மாதரம், பொம்மலாட்டம் , ஆணை, ஜெய்ஹிந்த், வாத்தியார் ,மருதமலை, ஏழுமலை உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்தார்.

இந்நிலையில் தற்போது 61 வயதாகும் நடிகர் அர்ஜுன் பார்ப்பதற்கு இன்னும் அதே இளமையான தோற்றத்தில் கட்டுமஸ்தான உடலை வைத்துக்கொண்டு ஆக்சன் காட்சிகள் நிறைந்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர்நிவேதிதா என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஐஸ்வர்யா அர்ஜுன், அஞ்சனா சர்ஜா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இதில் ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழ் சினிமாவில் நடிகையாக தென்பட்டு வருகிறார். முதன் முதலில் யானை திரைப்படத்தில் நடித்து 2013 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா அர்ஜுன். அதை அடுத்து பட்டத்து யானை திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட உமாபதி மீது காதல் வயப்பட்டார் ஐஸ்வர்யா. பெற்றோர்கள் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா – உமாபதியின் திருமணம் படு கோலாகலமாக நடந்துள்ளது. அவர்களின் திருமண புகைப்படங்கள் சில இப்போது வெளியாகியும் உள்ளது. ஐஸ்வர்யாவின் மாமனார் தம்பி ராமைய்யா திருமணத்திற்கு பிறகு தனது மருமகள் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்கின்ற கண்டிஷன் போட்டுள்ளாராம். இதற்கு ஐஸ்வர்யா அர்ஜுனின் குடும்ப உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.