சற்று முன்: 12 வயது மாணவன் துப்பாக்கியை எடுத்துச் சென்று Schoolல் சரமாரியாகச் சுட்டுள்ளான் !

சற்று முன்: 12 வயது மாணவன் துப்பாக்கியை எடுத்துச் சென்று Schoolல் சரமாரியாகச் சுட்டுள்ளான் !

சற்று முன்: வெறும் 12 வயதுச் சிறுவன் துப்பாக்கி ஒன்றை எடுத்துச் சென்று, தனது பள்ளிக்கூடத்தில் சுட்டுள்ளான். இதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதியாகிய நிலையில். ஒரு மாணவன் ரத்தப் போக்கு காரணமாக மரணித்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளார்கள்.

குறித்த துப்பாக்கிதாரி பள்ளிக்கூடத்தில் இருந்து சற்றுத் தொலைவில் நடந்து சென்றுகொண்டு இருக்கும் போது, பொலிசார் அவனைச் சுற்றிவளைத்துள்ளார்கள். தான் வைத்திருந்த துப்பாக்கியை கீழே வைத்து விட்டு, பொலிசாரிடம் 12 வயது மாணவன் சரணடைந்துள்ளான் என்று மேலும் அறியப்படுகிறது. இந்தச் சம்பவம் இன்று காலை 9 மணிக்கு பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கியில் இடம்பெற்றுள்ளது.

மணவன் மன நிலை குறித்து பொலிசார் ஆராய்ந்து வரும் நிலையில். பள்ளிக்கூட நிர்வாகம் இது தொடர்பாக எந்த ஒரு அறிவித்தலையும் விடுக்கவில்லை. சமீபகாலமாக ஐரோப்பிய நகரங்கள் எங்கும், மாணவர்களின் குற்றச்செயல்கள் அதிகளவில் இடம்பெற்று வருகிறது. இதற்கு சோஷல் மீடியாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

Source: https://www.dailymail.co.uk/news/article-13262523/finland-school-shooting-wounded-people.html