இப்ப வைத்தார்கள் ஆப்பு ! இஸ்ரேல் தாக்குதலில் 2 பிரித்தானியர்கள் படுகொலை- துள்ளிக் குதிக்கும் ரிஷி சுண்ணக் !

இப்ப வைத்தார்கள் ஆப்பு ! இஸ்ரேல் தாக்குதலில் 2 பிரித்தானியர்கள் படுகொலை- துள்ளிக் குதிக்கும் ரிஷி சுண்ணக் !

இஸ்ரேல் காஸா பகுதியில் நடத்திய விமான தாக்குதலில், 2 பிரித்தானிய பிரஜைகள் அதுவும் அறக்கட்டளை வேலை ஆட்கள் பரிதாபமாக இறந்துள்ளார்கள். இதனை அடுத்து உடனடியாக இஸ்ரேல் தூதுவரை அழைத்த பிரிதமர் ரிஷி, இதற்கு இஸ்ரேல் படைகள் விளக்கம் தரவேண்டும் என்று இன்று(2) காலை தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், தற்போதைய வெளிநாட்டு அமைச்சராக இருக்கிறார்.

டேவிட் கமரூன், விடுத்துள்ள அறிக்கையில் இந்த சம்பவம் தொடர்பாக நேர்மையாக விசாரணை நடத்தி அந்த அறிக்கையை பிரித்தானியாவுக்கு தரவேண்டும் என்று இஸ்ரேலிடம் தான் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். இஸ்ரேல் காஸா பகுதியில், குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தி பாலஸ்தீனர்களை படுகொலை செய்து வருகிறது. ஆனால் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல மேற்கு உலக நாடுகள் இதனை மறைத்து வருவதோடு. ஹமாஸ் விடுதலை அமைப்பை தீவிரவாத அமைப்பாக அடையாளப்படுத்தியும் வருகிறார்கள்.

இன் நிலையில் இஸ்ரேல் புரியும் மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருடனுக்கு தேள் கொட்டினால் எப்படி இருக்கும். ? சம்பவ இடத்தில் கத்தவும் முடியாது. அதுபோல ஒரு நிலையில் தான் தற்போது பிரித்தானியா நிற்கிறது. பட்டப் பகலில், NGO வாகனம் மீது தாக்குதல் நடத்தி, 2 பிரித்தானியர்களை கொலை செய்துள்ளது இஸ்ரேல் வான் படை. மக்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதிமீது எப்படி தாக்குதல் நடத்த முடியும் ? தற்போது இஸ்ரேல் வசமாக சிக்கிக்கொண்டுள்ளது.

Source: https://www.dailymail.co.uk/news/article-13263009/rishi-sunak-questions-israeli-airstrike-gaza-david-cameron-idf-investigation.html