ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதை எதிர்த்த குடும்பம் – சமந்தா வேதனை!

ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதை எதிர்த்த குடும்பம் – சமந்தா வேதனை!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் ஆன அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படத்தில் சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடி எல்லோரது கவனத்தை ஈர்த்துவிட்டார்.

ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா என்ற அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடுத்தது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே அந்த பாடலாக கூட பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா அந்த பாடலை குறித்து அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதாவது புஷ்பா படத்தில் நடனமாட வாய்ப்பு வந்தபோது நான் விவாகரத்து முடிவு எடுத்திருந்தேன். அந்த நேரத்தில் என்னிடம் எனக்கு தோழிகளும் சரி, குடும்பத்தினரும் சரி விவாகரத்து முடிவை அறிவிக்க போற நேரத்தில் கிளாமர் பாடலுக்கு நடனமாட வேண்டாம் என கூறினார்கள்”.

“ஆனால் அவர்களின் எதிர்ப்பை மீறி அந்த பாடலில் நான் நடனம் ஆடினேன். அது மிகப்பெரிய திருப்புமுறையாக அமைந்தது. அதை அனைவரும் அறிந்தது தான். அந்த வாய்ப்பை நிராகரிக்க என்னிடம் எந்த காரணமும் இல்லை. எதற்காக நான் மறைக்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. திருமண வாழ்க்கையில் நான் நூறு சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால், அது எனக்கு ஒர்க் ஆகவில்லை” என பேசினார். இது பழைய தகவலாக இருந்தாலும் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது