4 வருஷமாக வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு… சம்யுக்தாவின் சோகக்கதை!

4 வருஷமாக வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு… சம்யுக்தாவின் சோகக்கதை!

மாடல் அழகியாக இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் சம்யுக்தா. பிரபல தொகுப்பாளினியான விஜே பாவனாவின் நெருங்கிய தோழியான இவர் அவரின் சிபாரிசின் பேரில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த மிக மோசமான அனுபவத்தை குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

என்னுடைய கணவர் துபாயில் வேறொரு பெண்ணுடன் 4 வருடமாக உறவில் இருந்துள்ளார் என்பது எனக்கு பின்னர் தெரிய வந்தது. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியவில்லை. இதயம் உடைந்து போய் இருந்தேன். விவாகரத்து கேட்டும் அவர் கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் தான் என் தோழி பாவனாவிடம் கூறி அழுதேன். அவர் என்னை மனதளவில் தேற்றியதோடு பிக்பாஸ் வாய்ப்பையும் கொடுத்தார் என வேதனையை பகிர்ந்துள்ளார் சம்யுக்தா.