தமிழை ஒதுக்கி பாலிவுட்டில் செட்டில்… அங்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழை ஒதுக்கி பாலிவுட்டில் செட்டில்… அங்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு அவர் பெரிதாக எந்த ஒரு படங்களின் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் திடீரென இரண்டாவது இன்னிங்சாக 36 வயதினிலே திரைப்படத்தில் நடித்து ரீ எண்ட்ரி கொடுத்தார் .

அந்த படங்களைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இதனுடைய திடீரென தமிழ் படங்களை தவிர்த்துவிட்டு அவர் பாலிவுட்டில் சென்று அங்கேயே செட்டிலாகி ஹிந்தி படங்களில் தற்போது அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார்.

சைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் என இரண்டு ஹிந்தி படங்களில் ஜோதிகா நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் ஒரு படத்திற்கு அங்கு 4முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக கேட்கிறாராம். தமிழ் டாப் ஹீரோயின்கள் பெரும் சம்பளத்தை ஜோதிகா சால்டாக பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.