ராமராஜன் – நளினி விவாகரத்து காரணம் இதுதான்… உண்மை உடைத்த நளினி!

ராமராஜன் – நளினி விவாகரத்து காரணம் இதுதான்… உண்மை உடைத்த நளினி!

80ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை நளினி. இவர் அதே 90ஸ் காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகரான ராமராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது காதலுக்கும் ஆரம்பத்தில் பெற்றோர்கள் மிகுந்த எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதை அடுத்து நளினி வீட்டை எதிர்த்து ராமராஜனை ரகசிய முறையில் திருமணம் செய்து கொண்டார் . ஒரு கட்டத்தில் இவர்கள் மிகச் சிறப்பாக வாழ்க்கை வாழ்ந்து வந்த சமயத்தில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இவர்களுக்கு எனக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். விவாகரத்து ஆன பிறகும் தனது கணவரை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் மிகுந்த மரியாதையோடு பல பேட்டிகளில் நளினி பேசியிருக்கிறார்.அதற்கான என்ன காரணம் என்பது குறித்து சமீபத்திய பேட்டிகளில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதாவது, ஜாதகம் தான் எங்களுடைய விவாகரத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளார் நளினி. “நான் எத்தனை ஜென்மங்கள் எடுத்து பிறந்தாலும் அவர் தான் எனக்கு கணவராக வேண்டும். நானும் அவரும் தற்போது கூட நன்றாக பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்.

எங்களுக்குள் நேரம் சரியில்லை நாம் இருவரும் பிரிந்து இருந்தால் நல்லது. பிள்ளைகள் பிறந்து தந்தையுடன் இருந்தால் நல்லது இல்லை என்ற ஜாதகம் ரீதியான காரணங்கள் தான் நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்றோம். அவருக்கு ஜாதகத்தின் மீது ரொம்ப நம்பிக்கை” என நளினி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.