ஜோதிகாவின் இன்னொரு அக்காவை பார்த்திருக்கீங்களா?

ஜோதிகாவின் இன்னொரு அக்காவை பார்த்திருக்கீங்களா?

நடிகை ஜோதிகா மும்பையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் நடித்து இங்கு சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு அவர் பெரிதாக எந்த ஒரு படங்களின் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் திடீரென இரண்டாவது இன்னிங்சாக 36 வயதினிலே திரைப்படத்தில் நடித்து ரீ எண்ட்ரி கொடுத்தார் .

பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இதனுடைய திடீரென தமிழ் படங்களை தவிர்த்துவிட்டு அவர் பாலிவுட்டில் சென்று அங்கேயே செட்டிலாகி ஹிந்தி படங்களில் தற்போது அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார்.

சைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் என இரண்டு ஹிந்தி படங்களில் ஜோதிகா நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் ஜோதிகாவுக்கு நக்மாவை தாண்டி மற்றொரு சகோதரி இருக்கிறார். அவரும் ஒரு நடிகை தான்.

அவர் வேறு யாருமில்லை நடிகை ரோஷினி தான். ஆம், தமிழில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த சிஷ்யா எனும் திரைப்படத்தில் ரோஷினி நடிகையாக அறிமுகமாகியுள்ளார். அதன்பின் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் கூட நடித்துள்ளார்.அதன்பின் அவர் சினிமா பக்கம் வரவில்லை.