நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் கார்த்தி. இவர் தனது அண்ணன் சூர்யாவின் அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் தனது திறமையால் இன்று முன்னணி நடிகராக இடத்தை பிடித்து இருக்கிறார்.

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமான கார்த்தி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் மெட்ராஸ், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி,கடைக்குட்டி சிங்கம், கைதி, சுல்தான், பொன்னியின் செல்வன், விருமான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் கார்த்தி தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் கார்த்திக் ரூ.8கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். விளம்பரங்களில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகிறார். இவருக்கு சென்னை தி.நகரில் ரூபாய் 30 கோடி மதிப்பில் வீடு மற்றும் பிளாட் சொந்தமாக வைத்துள்ளார். கார்த்தியின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு மொத்தம் ரூ. 100 கோடி தாண்டும் என கூறப்படுகிறது.