சைந்தவி நல்ல பொண்ணு தான்…. ஆனால், ஜிவி பிரகாஷ் – பளீச்சின்னு போட்டுடைத்த பிரபலம்!

சைந்தவி நல்ல பொண்ணு தான்…. ஆனால், ஜிவி பிரகாஷ் – பளீச்சின்னு போட்டுடைத்த பிரபலம்!

கடந்த இரண்டு நாட்களாக தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளரான ஜி வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவியின் விவாகரத்து விவகாரம் தான் பெரும் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. மிகச் சிறந்த நட்சத்திர ஜோடிகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு அன்வி என்ற கை குழந்தை ஒன்றும் இருக்கிறது. இப்படியான சமயத்தில் இவர்கள் ஏன் விவாகரத்து செய்ய வேண்டும்? என்ன காரணமாக இருக்கக்கூடும் என பல தரப்பில் விவாதங்கள் எழுந்து வருகிறது.

அது மட்டும் இல்லாமல் ஜிவி பிரகாஷ் நடிகைகளுடன் தகாத உறவில் இருந்ததை அதை கண்டித்து கேட்டதால் சைந்தவி விவாகரத்து செய்ததாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான கே. ராஜன் இந்த விவகாரம் குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது. போன மாசம் தான் ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் விவாகரத்து கோர்ட்டிற்கு போச்சு. அதுக்குள்ள இப்ப புதுசா ஜிவி பிரகாஷ் சைந்தவி கேஸ்…

அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு தான் முதல் பாட்டு என்னுடைய ‘உணர்ச்சிகள்” படத்துல பாடுச்சு. காதல் பண்ணி நல்லா புரிஞ்சுகிட்டு தான் ஜி வி பிரகாஷை கல்யாணம் பண்ணுச்சு அதன் பிறகு அவங்களுக்குள்ள அப்படி என்ன மனக்கசப்பு வந்துடுச்சு அப்படின்னு தெரியல.விட்டுக்கொடுத்து வாழ்ந்தவன் கெட்டுப் போவதில்லை.

15 நாள் காதல் , ஒரு மாச வாழ்க்கை, மூணு மாசம் லிவிங் லைப் , விவாகரத்து இப்படி கோர்ட் ஃபுல்லா விவாகரத்து கேஸ் குவிந்து போய் கிடக்கிறது. ஆனால் சினிமாவிலும் சினிமா நட்சத்திரங்களும் இப்படி செய்வது நல்லதல்ல. படங்களின் மூலமாக நாம் தான் மக்களுக்கு நல்ல கருத்துக்களையும் நல்ல புத்திகளையும் சொல்ல வேண்டும். ஆனால், நாமலே இப்படி நடந்து கொள்வது மிகப்பெரிய தவறு. நன்றாக வாழுங்கள்…. குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு வாழுங்கள்….குழந்தைகளை பெற்று இந்த நாட்டுக்கு செழிப்பான வாழ்க்கை வாழுங்கள் என கே ராஜன் மிகுந்த வருத்தத்தோடு பேசியுள்ளார்.