அந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை…. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!

அந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை…. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஒவ்வொரு படத்திலும் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் மெய்சிலிர்க்க வைப்பார்.

குறிப்பாக அவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நடிகையர் திலகம். இந்த படத்தில் நடிகை சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். அவ்வளவு கச்சிதமாக அந்த படத்திற்கு பக்காவாக பொருந்தும் வகையில் கீர்த்தி சுரேஷ் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், “நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு இன்னும் பொறுப்போடு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த படத்திற்கு பின்பு தான் வந்தது. ஆனால் எல்லா படங்களும் அப்படி அமைவதில்லை. அது ஒரு மேஜிக்…. சில நேரங்களில் மட்டுமே நடக்கும். அதுபோன்ற படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.