பெரும் நஷ்டம்…. என் கணவர் 2 ஆண்டுகள் சும்மா கிடந்தார்… கொந்தளித்த நடிகை குஷ்பூ!

பெரும் நஷ்டம்…. என் கணவர் 2 ஆண்டுகள் சும்மா கிடந்தார்… கொந்தளித்த நடிகை குஷ்பூ!

சமீபகாலமாக திரையரங்குகளில் பழைய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. அந்த வகையில் விஜய்யின் கில்லி அஜித்தின் பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியானதை அடுத்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த அன்பே சிவம் திரைப்படத்தில் ரிலீஸ் செய்ய ரசிகர்கள் கோரிக்க வைத்து வந்தனர்.

ஆனால் இந்த கோரிக்கை குஷ்பு நிராகரித்திருக்கிறார். அதாவது அன்பே சிவம் படத்தை எல்லாம் ரீ ரிலீஸ் செய்ய முடியாது. அந்த படம் வெளியான சமயத்தில் அந்த படத்தை யாரும் தியேட்டருக்கு போய் பார்க்காமல் என் கணவருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை கொடுத்தார்கள். அதன் பிறகு என் கணவர் அந்த படத்தை வெளியிட்ட பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சும்மாவே வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அதன் பிறகு தான் நாங்கள் வாழ்க்கையில் ஒரு முடிவெடுத்து அவ்னி சினிமாஸ் என்ற சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருந்தோம். அன்பே சிவம் திரைப்படத்தில் அன்று மக்கள் கொண்டாட்டத்திற்கு ஒரு நல்ல விஷயமாக தான் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் ஒருவேளை அன்று மக்கள் எல்லோரும் அந்த படத்தை கொண்டாடி இருந்தால் இன்று நாங்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையே வைத்திருக்க மாட்டோம் என கூறி இருக்கிறார் .

அது மட்டும் இல்லாமல் அன்று என்னுடைய கணவரின் படத்தை கொண்டாட தவறியவர்கள் இன்று மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என குஷ்பு தனது வேதனை பகிர்ந்து இருக்கிறார். சுந்தர் சி இயக்கிய சிறந்த படங்களில் அன்பே சிவம் மிக முக்கியமான படம். அந்த படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் அவர் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார். அன்று புரிந்துகொள்ளாதவர்கள் என்று புரிந்து என்ன பயன்? என கேட்டுள்ளார்.