பிரகாஷ் ராஜ் மறுமணம் செய்துக்கொண்டும்… முதல் மனையின் திருமணமே செய்யாமல் இருக்க காரணம்!

பிரகாஷ் ராஜ் மறுமணம் செய்துக்கொண்டும்… முதல் மனையின் திருமணமே செய்யாமல் இருக்க காரணம்!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக தென்பட்டு வருபவர் பிரகாஷ்ராஜ். இவர் குறிப்பாக படங்களில் வில்லன் ரோல்களை ஏற்று நடத்து மிகக் கச்சிதமான மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலமான வில்லனாக பார்க்கப்பட்டு வருகிறார்.

குறிப்பாக இவர் விஜய்யின் கில்லி திரைப்படத்தில் முத்து பாண்டி என்ற கேரக்டரில் வில்லனாக நடித்திருந்தது இன்று வரை எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ரோலாக பார்க்கப்படுகிறது. அவ்வளவு ஏன் வில்லன் நடிகரை மக்கள் அவ்வளவு காதலித்து பார்த்தார்கள் என்றால் அது பிரகாஷ் ராஜ் ஆகத்தான் இருக்க முடியும். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி மராத்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு லலிதா குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேக்னா மற்றும் பூஜா என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென இருவருக்கும் மணமுறிவு ஏற்பட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்டார். பிரகாஷ்ராஜ் விவாகரத்து ஆகிய அடுத்த ஆண்டிலேயே கோரியோகுராஃபர் போனி வர்மாவை 2010ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முன்னள் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாலும் லலிதா குமாரி இன்னும் 2ஆம் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை கூறிய லலிதா குமாரி, நான் என் முதல் திருமண வாழ்க்கையில் உண்மையாகத்தான் இருந்தேன். விவாகரத்து நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை சிறப்பாக எனக்கு அமைந்தது. அதை தவிர்த்து வேறு ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.