செல்ஃபி ரசிகருக்கு ராஷ்மிகாவின் செயல்… வைரலாகும் வீடியோ!

செல்ஃபி ரசிகருக்கு ராஷ்மிகாவின் செயல்… வைரலாகும் வீடியோ!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழ் , தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார். இவர் நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

முதன் முதலில் கன்னட திரைப்படத்தில் வெளிவந்த க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமாகி தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வந்தார் இதனிடையே தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

பின்னர் நேஷ்னல் கிரஷ் என்ற பட்டத்தை பெற்றதும் இந்தி சினிமாவில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க பிரபல நடிகரான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும். வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது நடிகை ராஷ்மிகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரது தீவிர ரசிகர் செல்ஃபி எடுக்க கேட்க உடனே ராஷ்மிகா அவரை மேடைக்கு அழைத்து அவர் செல்பி எடுக்கும்போது கீழே அமர்ந்து போஸ் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் செல்லமாக அவரது க்யூட்டான ரியாக்ஷன் கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.