புகைப்படத்துடன் குட் நியூஸ் சொன்ன ஆலியா மானசா – குவியும் வாழ்த்துக்கள்!

புகைப்படத்துடன் குட் நியூஸ் சொன்ன ஆலியா மானசா – குவியும் வாழ்த்துக்கள்!

ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்ததன் ரியல் ஜோடியாக மாறியவர்கள் தான் ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடி. இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை இருக்கிறார்கள்.

அழகிய குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா புகைப்படத்துடன் குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார். அதாவது ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் சென்னையில் ஒரு வீடு கட்டிக்கொண்டு வருகிறார்கள் என முன்னரே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது வீட்டின் வேலைகள் முடிவடைந்து கிரஹப்பிரவேசம் நடக்க இருக்கிறதாம். வீட்டை சுத்தம் செய்யும் வேலைகள் இப்போது நடந்து வருவதாக ஒரு போட்டோவுடன் ஆல்யா மானசா ஒரு பதிவு போட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .