விஜய்யின் நண்பர் சஞ்சீவ் மகளா இது ? கொள்ளை அழகுக்கு குவியும் லைக்ஸ்!

விஜய்யின் நண்பர் சஞ்சீவ் மகளா இது ? கொள்ளை அழகுக்கு குவியும் லைக்ஸ்!

பிரபல தொலைக்காட்சி நடிகரும் திரைப்பட குணச்சித்திர நடிகரும் ஆன சஞ்சீவ் பல்வேறு சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார். குறிப்பாக இவர் திருமதி செல்வம் சீரியலில் நடித்ததின் மூலமாக இன்று வரை தன்னுடைய அடையாளத்தை இயக்காமல் வைத்திருக்கிறார் .

அந்த தொடர் அவரை மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது என்று சொல்லலாம். இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர். கல்லூரி காலத்தில் இருந்து விஜய்யுடன் நெருக்கமாக பழகி அவருடன் நெருங்கிய தோழனாக இருந்து வருகிறார் அவ்வப்போது அவர்கள் நண்பர்களோடு சேர்ந்து அவுட்டிங் செல்லும் மற்றும் குரூப் போட்டோ எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.

மேலும், விஜய்யின் பல்வேறு திரைப்படங்களில் சஞ்சீவ் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் இதனிடையே நடிகர் சஞ்சீவ் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லயா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் 18வது பிறந்தநாளை கொண்டாடும் மகள் லயாவுக்கு சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அழகான புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இந்த போட்டோவுக்கு லைக்ஸ் குவித்த நெட்டிசன்ஸ் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

athirvu