பாடகி சுசித்ரா மீது கணவர் அதிரடி வழக்கு – ரூ. 1 கோடி அபராதம்!

பாடகி சுசித்ரா மீது கணவர் அதிரடி வழக்கு – ரூ. 1 கோடி அபராதம்!

ஆர்ஜேவாக இருந்து பிறகு பின்னணி பாடகியாக புகழ்பெற்றவர் தான் பாடகி சுசித்ரா. இவர் பாடகி , நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் இப்படி பன்முக திறமை கொண்ட சிறந்த பெண்மணியாக திரைத்துறையில் வலம் வந்து கொண்டிருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு இவரது ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து பல நடிகர் நடிகைகளின் அந்தரங்கள் லீலைகள் வீடியோக்கள் சர்ச்சைக்கு உள்ளானதாக பார்க்கப்பட்டது.

அப்போது சுசித்ரா மிகவும் மோசமான மனநிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் ஆளே அட்ரஸ் இல்லை என்ற அளவுக்கு கோலிவுட் சினிமாக்கள் செய்திகள் வெளியிட்டது . அவர் பின்னர் லண்டனில் சென்று செட்டில் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியானது .

அதையடுத்து பல வருடங்களுக்கு பிறகு சுசித்ரா கடந்த சில நாட்களாக பேட்டிகளில் பல நடிகர்களின் அந்தரங்க விவகாரங்களை பற்றி வெளிப்படையாக பேசி பேரதிர்ச்சியை கொடுத்து வந்தார். ஆண்ட்ரியா , திரிஷா, தனுஷ் , முன்னாள் கணவர் கார்த்திக் உள்ளிட்டோர் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார்.

இந்நிலையில் தற்ப்போது சுசித்திராவின் முன்னாள் கணவர் கார்த்திக், சுசித்திரா மீது மானநஷ்ட ஈடு வழங்க கோரி வழக்கு தொடுத்துள்ளார். அதில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய சுசித்ரா ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரியுள்ளார். இதையடுத்து அந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதிகள் சுசித்ரா, கார்த்திக் பற்றி கருத்துக்களை தெரிவிக்க இடைகலை தடைவிதித்து இருக்கிறது.