இப்போ Single-ஆ, Committed-ஆ? பட்டென உண்மை உடைத்த ஸ்ருதி ஹாசன்!

இப்போ Single-ஆ, Committed-ஆ? பட்டென உண்மை உடைத்த ஸ்ருதி ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்து பிரபல இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக தென்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தனது அப்பாவின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தாலும் கூட இவர் தனது திறமையால் தான் தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார் என்பது. நிதர்சனமான உண்மை. நடிப்பதையும் தாண்டி மிகச்சிறந்த பாடகியாக தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இவர் பாடல்களையும் பாடி இருக்கிறார்.

இதனிடையே சாந்தனு ஹசாரிக்கா என்பவரை காதலித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தார். பின்னர் அவருடன் பிரேக் அப் செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி தீயாய் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் Instagram உரையாடலில் ஒரு ரசிகர் நீங்கள், Single-ஆ, Committed-ஆ என்று கேள்வி கேட்டார். இதற்கு ஸ்ருதி ஹாசன், “நான் இப்போது சிங்களாக இருக்கிறேன். வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருக்கிறேன்” என்று பதில் அளித்து இருக்கிறார்.