கமல் ஹாசனை பிரிய இது தான் காரணம்… நடிகை கௌதமி Open talk!

கமல் ஹாசனை பிரிய இது தான் காரணம்… நடிகை கௌதமி Open talk!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை கௌதமி தெலுங்கு மலையாளம் ஹிந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த வந்தார் .

ரிக்ஷா மாமா , பணக்காரன் ,குரு சிஷ்யன் ,அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ராஜா , ராஜா கைய வச்சா, ருத்ரா ,தேவர் மகன் , நம்மவர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கமல்ஹாசன் உடன் பல திரைப்படங்களை இவர் சேர்ந்து நடித்ததால் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறியது .

பின்னர் திருமணம் செய்யாமலே லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார்கள். இதனிடையே பல வருட வாழ்க்கைக்கு பிறகு பின்னர் திடீரென அவரை பிரிந்து விட்டார். அதற்கான காரணம் தனது மகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறியிருந்தார் நடிகை கௌதமி. கமல்ஹாசனை பிரிந்ததற்கான என்ன காரணம் என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒரு வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் கௌதமி.

“ஒரு ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் இருக்கும் போது அந்த அந்த ரிலேஷன்ஷிப் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், அதற்கான எல்லா பொறுப்பையும் நீங்கள் எடுக்க தேவை இல்லை. இருவருக்கும் இடையேயான அன்பு, அர்ப்பணிப்பு உள்ளிட்டவை சமமாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் அந்த உறவு நீண்ட நாட்கள் நீடிக்கும். எந்த விதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அதற்கு இடையே ஒரு மையப் புள்ளி ஆனது கண்டிப்பாக இருக்கும். இரண்டு பேர் இருக்கும் ரிலேஷன்ஷிப்பில் 50 % தாண்ட கூடாது. இதை நான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்று இருக்கிறேன்” என்று கௌதமி கூறியுள்ளார்.