குடிபோதையில் என்னிடம் வந்து அப்படி செய்தார்… அஜித்தையும் விட்டு வைக்காத சுசித்ரா!

குடிபோதையில் என்னிடம் வந்து அப்படி செய்தார்… அஜித்தையும் விட்டு வைக்காத சுசித்ரா!

தென்னிந்திய சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக இருந்து வந்தவர் தான் சுசித்ரா. இவர் ஆஜேவாக தனது பணியை துவங்கி அதன் பின்னர் பாடகி டப்பிங் ஆர்டிஸ்ட் நடிகை இப்படி பன்முகத் திறமை கொண்டவராக பார்க்கப்பட்டார்.

இதனிடையே 2016 ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கி சுசித்ரா சீரழிந்தார். அதன் பிறகு இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் பூதாகரமாக வெடிக்க துவங்கியது. நடிகர் தனுஷ் தனது முன்னாள் கணவர் கார்த்திக், திரிஷா உள்ளிட்ட பிரபலங்களை குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வருகிறார் சுசித்ரா.

என் வாழ்க்கையை நாசம் செய்ததே நடிகர் தனுஷ் மற்றும் என்னுடைய முன்னாள் கணவரான கார்த்திக் தான் எனக்கூறி பகீர் கிளப்பி இருந்தார். தொடர்ச்சியாக திரிஷா குறித்தும், பேசியிருந்தது பெரும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தை குறித்தும் சுசித்ரா பேசியிருப்பது பெரும் பூதாகரமாக கோலிவுட்டில் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

அதாவது, ஒரு பார்ட்டியில் அஜித்தும் நானும் பல பிரபலங்கள் கலந்துகொண்டோம். அந்த பார்ட்டியில் அஜித் குடித்துவிட்டு அழுதுகொண்டு இருந்தார். மேலும் அஜித் என்னிடம் வந்து, உங்களை பார்த்த jealous ஆ இருக்கு. விஜய் படத்தில் நீங்கள் பாடிய சின்னத்தம்பரை சூப்பரா இருந்தது என்று சொன்னார். அவர் ஒரு நல்ல மனிதர்,நல்ல பேசினார் என்று சுசித்ரா கூறியுள்ளார்.