படுக்கை காட்சியில் பாடாய் படுத்துறாங்க… சாய் தன்ஷிகா ஒரே போடு!

படுக்கை காட்சியில் பாடாய் படுத்துறாங்க… சாய் தன்ஷிகா ஒரே போடு!

தமிழ் சினிமாவில் மிகவும் போல்டான நடிகையாக பெயர் எடுத்துப்பவர் தான் நடிகை சாய் தன்ஷிகா. அவர் முதன் முதலில் பேராண்மை திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படத்தில் இவர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததற்காக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

அதையடுத்து அரவான், பரதேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ரஜினிகாந்தின் மகளாக கபாலி திரைப்படத்தில் நடித்து தான் சாய் தன்ஷிகாவுக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் கிடைத்தது. அதில் டாம் பாய் லுக்கில் அவர் நடித்திருந்த நடிப்பு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதன் பின்னர் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கும் என எதிர்பார்த்தார்.

ஆனால், அப்படி எதுவுமே அமையவில்லை அதற்கு மாறாக புது நடிகைகளின் வரவால் சாய் தன்ஷிகாவுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. படுக்கையறை காட்சிகளில் நடிப்பதை குறித்து மனம் திறந்து பேசி இருக்கும் சாய் தன்ஷிகா அதற்கு நானெல்லாம் வேலைக்கு ஆகமாட்டேன். அது போன்ற காட்சிகளில் நடிக்க மிகவும் சிரமம். அதில் படுத்தி எடுப்பார்கள். ஏன் என்றால் நான் கிளாமருக்கு செட் ஆகமாட்டேன். சிலர் அதை அழகாக காட்டுவார்கள். சிலரோ வலுக்கட்டாயமாக திணிப்பார்கள். எனக்கு படுக்கையறை, முத்த காட்சிகளில் நடிக்க உடன்ப்பாடு இல்லை என்று தன்ஷிகா கூறியுள்ளார்.