” என் காதலன் இவர் தான் ” புகைப்படத்துடன் திருமணத்தை அறிவித்த சுனைனா!

” என் காதலன் இவர் தான் ” புகைப்படத்துடன் திருமணத்தை அறிவித்த சுனைனா!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை சுனைனா. இவர் தமிழை தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

முதன் முதலில் தமிழில் வெளிவந்த காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் அறிமுகத்தை கொடுத்து நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொண்டார். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் .

இந்த திரைப்படத்தில் சுனைனா மற்றும் நகுல் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் காதல் காட்சிகள் உள்ளிட்டவை இன்றளவும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் ஹிட் படமாக இருந்து வருகிறது. அதை அடுத்து தொடர்ந்து திரைப்படங்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார்.

வம்சம், நீர் பறவை, சமர் , தெனாலிராமன் உள்ளிட்ட திரைப்படங்கள் மட்டும் நடித்தாலும் அத்தனை படமும் அவரது கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதாக இருக்கும்படியாகவும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை சுனைனா.

இந்நிலையில் தற்போது தற்போது சொல்லப்படும் தகவல் என்னவென்றால், 35 வயதான சுனைனா, லாக் என்று குறிப்பிட்டு ஒரு நபரின் கையை பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், இவர் தான் உங்க காதலரா? முகத்தை காட்டுங்கள் என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். மேலும் சுனைனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.