அரசியலில் செக்- மேட் ஆகியுள்ள மோடி இனி இந்த 2 பேர் கைகளில் தான் டெல்லி அரசியல் இருக்கும் !

அரசியலில் செக்- மேட் ஆகியுள்ள மோடி இனி இந்த 2 பேர் கைகளில் தான் டெல்லி அரசியல் இருக்கும் !

3வது முறையாக நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவி ஏற்க்க உள்ளார். ஆனால் அவரால் தனிப் பெரும்பாண்மையாக 272 இடங்களை பிடிக்க முடியவில்லை. இதனால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. காரணம் நரேந்திர மோடி 240 இடங்களையே கைப்பற்றி உள்ளார். இதனால், அவரால் பெரும்பாண்மையை நிரூபிக்க முடியாது. இன் நிலையில் பீகார் முதலமைச்சரின் கட்சியான ஜனதா தள், 12 ஆசனங்களை பெற்றுள்ளது, அதன் தலைவர், நித்திஷ் குமாரை மோடி இன்று சந்தித்துள்ளார். அவர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்…

தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் இன்று டெல்லியில் மோடியை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து குறித்த 2 தலைவர்களின் ஆதரவால் மோடி ஆட்சியை அமைக்க, முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. ஆனால் மோடி முன்னர் போல நினைத்த எந்த ஒரு விடையத்தையும் தன்னிச்சையாக செய்ய முடியாது. காரணம் சந்திரபாபு நாயுடு மற்றும் நித்திஷ் கைகளில் தான் தற்போது ஆட்சி உள்ளது என்று தான் கூறவேண்டும். இவர்களில் ஒருவர், எந்த நேரமானாலும் ஆதரவை வாபஸ் வாங்கினால் மோடியின் பதவி பறிக்கப்படும்.

இதனால் மோடிக்கு அரசியலில் பெரும் செக்-மேட் ஒன்று உருவாகியுள்ளது. இது மட்டும் அல்ல மிக மிக முக்கியமான அமைச்சுப் பதவிகளை சந்திரபாபு நாயுடு தனது கட்சி உறுப்பினர்களுக்கு கொடுக்கும் படி தற்போது நிபந்தனை முன் வைத்துள்ளார். அது போக, நித்திஷ் குமாரும் சற்றும் சளைத்தவர் அல்ல. தேர்தலில் தோல்வியுள்ள தனது மகனை, நியமன MP ஆக்கி, அவருக்கும் அமைச்சு பதவி ஒன்று கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். இதனால் மோடியின் ஆட்டம் குளோஸ் ! தற்போது இந்தியாவில் 2 ஸ்டார் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றால், அது வேறு யாரும் அல்ல, நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு தான்.

இவர்களைப் பற்றித் தான் தற்போது முழு இந்தியாவும் பேசிக் கொண்டு இருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் மோடியிடம் போட்டுள்ள நிபந்தனைகளை கேட்டால் தலை சுற்றும் என்று கூறப்படுகிறது