அரண்மனை 4 படத்திற்கு தமன்னா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அரண்மனை 4 படத்திற்கு தமன்னா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . குறிப்பாக இந்தியில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே தமிழில் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளின் நடித்துவரும் தமன்னா அண்மையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் சுந்தர் சியின் தங்கையாக தமன்னா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 70 கோடிக்கு மேல வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது.

குறிப்பாக இந்த படத்தில் நடிகை தமன்னா எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது. அதாவது 4 முதல் 5 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. முன்னதாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திற்காக தமன்னா மூன்று கோடி சம்பளமாக வாங்கிய நிலையில் தற்போது அதனை 30%சதவீதம் உயர்த்தி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.