கேவலமான கமெண்ட்ஸ்… விஜே மகேஸ்வரி பதில் கேட்டு ஷாக்கான நெட்டிசன்ஸ்!

கேவலமான கமெண்ட்ஸ்… விஜே மகேஸ்வரி பதில் கேட்டு ஷாக்கான நெட்டிசன்ஸ்!

பிரபல தொகுப்பாளினியாக விஜே மகேஸ்வரி சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது கேரியர் தொடங்கி தொடர்ந்து ஜீ தமிழ் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மனதில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டார். இதனிடையே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் மக்களின் மனதில் இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம்.

இது தவிர அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க சென்னை 28, பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து திரைப்படம் மற்றும் தொகுப்பாளியாக இருந்து கொண்டே சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் விஜே மகேஸ்வரி சமீபத்திய பேட்டி ஒன்றில் சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களுக்கு வரும் மோசமான கமெண்ட் குறித்து அவர் பேசியிருப்பதாவது, “கிளாமர் போட்டோஷூட் பற்றிய கருத்துக்களை நான் பார்க்கமாட்டேன். எங்கே போனாலும் கமெண்ட் போடத்தான் செய்வார்கள். சேலை கட்டினாலும் சரி, “இங்க தெரிது, அங்க தெரிதுன்னு” என்று சொல்லுவாங்க. இந்த கமெண்ட் எல்லாம் ஒரு சதவீதம் கூட பயன் கிடையாது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விஷயம் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.