Posted in

வெறும் 14 வயது ஆனால் இடுப்பில் சாமுராய் வாள்: மடக்கிய லண்டன் பொலிசார் !

பிரித்தானியாவில் மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் உள்ளது. சும்மா ஆப்பிள் வெட்ட கூட கத்தி வைத்திருந்தால் 5 வருட சிறை தண்டனை உள்ளது. இந்த நிலையில், மக்கள் நடமாடும் பகுதியில் சாமுராய் வாள் ஒன்றை, பாண்டில் மறைத்து வைத்துக் கொண்டு ஒரு ஆபிரிக்க நாட்டுச் சிறுவன் அலைந்துள்ளார்.

லண்டனில் கில்-பேன் பகுதி என்றாலே போதும். அங்கே பொலிசார் கூட செல்ல அச்சம் கொள்வார்கள். இதேபோல குரைடன், ரூட்டிங், பிரிக்ஸ்டன் என்று ஆபிரிக்க நபர்கள் வாழும் பகுதி எங்கும் பல கத்திக் குத்து சம்பவங்கள் நாளுக்கு நாள் இடம்பெற்று வருகிறது.

குறித்த சம்பவத்தில், இந்தச் சிறுவன் யாரையோ வெட்ட என காத்திருந்த வேளை பொலிசார் கண்களில் பட்டதால். பொலிசார் உடனே அவனை சோதனை செய்த வேளை பெரிய சாமுராய் வாள் சிக்கியது. இதனால் அந்தச் சிறுவனை பொலிசார் அந்த இடத்திலேயே கைது செய்தார்கள். ஆனால் அவன் முகத்தில் எந்த பதற்றமும் இல்லை. மேலும் சொல்லப் போனால் அவர் பொலிசாரையே முறைத்துப் பார்கிறார்.

இப்படியான ஒரு சூழலில் தான் லண்டனில் மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது பெரும் ஆச்சரியமான விடையம். ஆசியாவில் உள்ள பலர் லண்டன் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் லண்டனில் நடக்கும் கொடூரங்களை கேட்டால் அங்கே காலடி எடுத்துக் கூட வைக்க மாட்டார்கள். கீழே வீடியோ இணைப்பு.

Exit mobile version