சிம்ரனின் மெகா ஹிட் படத்தை தட்டி பறித்த ஜோதிகா – தாறுமாறு வெற்றி!

சிம்ரனின் மெகா ஹிட் படத்தை தட்டி பறித்த ஜோதிகா – தாறுமாறு வெற்றி!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. இவர் 46 வயது ஆகியும் தற்போதும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 2000காலகட்டத்தின் ஆரம்பம் முதல் இவர் நடிக்க துவங்கி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார்.

இதனிடையே பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடிகை சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். குழந்தை பிறப்புக்கு பிறகு ஜோதிகா சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். அதன் பின்னர் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார் .

இந்நிலையில் சிம்ரன் நடிக்கவிருந்த மெகா ஹிட் படத்தை தட்டிப்பறித்து ஜோதிகா பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் முன்னதாக கங்கா கேரக்டரில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன் தானம். அவர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போக கடைசியில் ஜோதிகா கமிட்டாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படமாகும் அவரது நடிப்பு பற்றி தொட்டு எங்கும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.