ரூ. 1 லட்சத்தில் செருப்பு… வாய்ப்பிளக்க வைத்த அனிகா சுரேந்திரன்!

ரூ. 1 லட்சத்தில் செருப்பு… வாய்ப்பிளக்க வைத்த அனிகா சுரேந்திரன்!

மலையாளத் திரைப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அங்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் பேபி அனிகா. இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து அசத்தியிருந்தார்.

முதல் படத்திலேயே பிரபலமான குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்டார். அதை எடுத்து மீண்டும் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். அந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் ரீல் மகளாகவே அனிகா தமிழ் மக்கள் மனதில் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஹீரோயினாக படுமோசமான படுக்கையறை காட்சிகளில் கூட தைரியமாக இறங்கி நடித்திருக்கிறார். இந்த நிலையில் அனிகா குறித்த ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மும்பையில் ஒரு செருப்பை பார்த்ததாகவும் அது என்னை மிகவும் கவர்ந்ததாகவும் கூறினார். 6 இன்ச் ஹீல்ஸ் கொண்ட அந்த செருப்பின் மீது தீராத ஆசை இருக்கிறது. ஆனால் அந்த செருப்பின் விலை 1 லட்சம் ரூபாய். எப்படியாவது பணத்தை சேர்த்து வைத்து அதை வாங்கிவிட வேண்டும் என்று முயற்சியில் பணத்தை சேமித்து வருகிறேன் என்று அனிகா கூறியிருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள் ரூ. 1 லட்சம் இருந்தால் நாங்கள் வாழ்க்கையில் உருப்படியான ஏதாச்சும் செய்வோம் என ஏக்கத்துடன் கூறி வருகிறார்கள்.