கொழுத்தி போடும் blue sattai மாறன்: ரஜனி விஜயை நிம்மதியா தூங்க விட மாட்டார் போல இருக்கே ?

திரையில் வெளியாகும் படங்களை விமர்சித்து புகழ் பெற்ற ப்ளூ சட்டை மாறன், சமீபத்தில் எக்ஸ் தளத்தில் பல்வேறு விவகாரங்களை பகிர்ந்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அண்மைக்காலத்தில் அதிகமாக விமர்சனங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து வந்துள்ளார். மேலும் விஜய் அரசியல் குறித்தும் தலைவர்(ரஜினிகாந்த்) அவரை தூங்க விடமாட்டார் என்றும் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கண்டபடி திட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கார் ரேசில் தல வென்றதற்கு தலீவர் வாழ்த்து ட்வீட் போட்டுள்ளார். அரசியலுக்கு வர பயந்து புறமுதுகிட்டு ஓடியவர்.. தான் உண்டு. தன் ஷூட்டிங், டப்பிங் உண்டு என இருக்க மனமில்லை.நான் முன்பு சொன்னதுபோல.. தமிழக அரசியலை தீர்மானிக்கும் கிங் மேக்கராக.. அதாவது தனது குருநாயர் சோ அவர்களைப்போல ஆகவேண்டுமென முயல்கிறார். ஆனால் சோவிற்கு உள்ள அரசியல் அறிவில் 1% கூட இவருகில்லை என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் அது இவருக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யமே இல்லை.

தலீவருக்கு இரண்டே ஆசைகள்தான். 

1.தனது எஜமானர்களின் நீண்டகால எதிரியான திமுக தோற்க வேணடும்.

2. திரைப்பட வியாபாரம் மற்றும் வசூலில் தன்னை தோற்கடித்த விஜய் மீதான காண்டு. 

விஜய் இனி படங்களில் நடிப்பதில்லை என்றதும் கொஞ்சம் பெருமூச்சு விட்டார்.ஆனால் தற்போது அரசியலுக்கு வந்து ஜெயித்து விடுவாரோ எனும்  பதட்டம் தொற்றிக்கொண்டது.விஜய் முதல வராக உள்ள மாநிலத்தில் வாழ்வதை தலீவரால் ஜீரணிக்கவே இயலாது. இந்த புத்தாண்டில் நல்லவனை ஆண்டவன் கை விட மாட்டான். கெட்டவங்களை கை விட்ருவான் என குறிப்பிட்டார். எப்போதுமே  வெறும் வாழ்த்து செய்தி மட்டும் போடுபவர்.. இம்முறை இப்படி ஒரு உள்குத்தை சொருகியுள்ளார்.

அதாவது விஜய் கெட்டவராம். அஜித் நல்லவராம். தற்போது அஜித் ரேசில் வென்றதற்கு.. திடீர் அதிசயமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை மறைமுகமாக சீண்டுகிறாராம்.தலீவரே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று 2026 தேர்தல் முடிந்த பிறகு வர வாய்ப்புணடு.

ஒருவேளை தேர்தலில் தவெக தோற்றால் விஜய் அரசியலை விட்டு விலகலாம் அல்லது கமலை போல சினிமாவில் நடித்தபடியே பார்ட் டைம் அரசியல் செய்யலாம். அப்படி ஒரு நிலைமை வந்தால்... மீண்டும் அவர்தான் வியாபாரம் மற்றும் வசூலில் நம்பர் ஒண்ணாக இருப்பார். தலீவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படத்தின் வசூல்.. GஓஆT வசூலில் 30% கூட இல்லை.ஆகவே... மின்சார கண்ணாவால்.. தலீவருக்கு காலம் முழுக்க ஷாக் உறுதி. அவர் உங்களை நிம்மதியாக தூங்கவே விடமாட்டார்.


Post a Comment

Previous Post Next Post