GO BACK

கடந்த ஆகஸ்ட் மாதம் சங்கீதா போட்ட வழக்கை- யார் தூசு தட்டி எழுப்பியது ? அரசியல் பழிவாங்கலா


 மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் மீது, தொடர்ச்சியாகப் பல அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. விஜய் - சங்கீதா உறவு கடந்த சில ஆண்டுகளாகவே சீராக இல்லை. இதன் காரணமாக விஜய்யைப் பிரிய முடிவு செய்த சங்கீதா, கடந்த ஆண்டு தனக்கு விவாகரத்து வேண்டும் எனக் கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இதனை மிகவும் ரகசியமாகவும் அவர் பேணி வந்துள்ளார். விவாகரத்து வழக்கு நடக்கும் வேளையில், நீதிமன்றத்தில் வேறு யாரும் இருக்கக் கூடாது என்று கூட சங்கீதாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.

நீதிமன்றமே இந்த வழக்கை ரகசியமாக விசாரிக்க இருந்தது. இந்த நிலையில், சில விஷமிகள் (தீய சக்திகள்) இந்தக் குடும்ப விவகாரத்தைத் தற்போது அரசியலாக மாற்றியுள்ளார்கள். ஏற்கனவே நடத்தப்பட்ட பல கருத்துக் கணிப்புகளில், விஜய்க்குப் பெண்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது. எனவே, விஜய் - சங்கீதா விவாகரத்தைப் பற்றிய செய்தியைக் கசிய விட்டால், விஜய்க்கு இருக்கும் பெண்கள் செல்வாக்குச் சரிந்துவிடும் என்று நினைத்த சிலரே இந்தக் குடும்ப விவகாரத்தைத் தெருவுக்கு இழுத்து விட்டுள்ளார்கள்.

இது போன்ற மானங்கெட்ட அரசியல் பிழைப்பைச் சில தீய சக்திகள் நடத்தி வருகின்றன. நேருக்கு நேராக நின்று மோதாமல், இது போன்ற குடும்பப் பிரச்சினைகளை அரசியல் லாபத்திற்காக இழுப்பது ஒரு ஈனத்தனமான அரசியலாகும். தற்போது சங்கீதாவே நிலைகுலைந்து நிற்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. பொதுவாகக் கணவன் - மனைவிக்கு இடையே பல சர்ச்சைகள் தோன்றுவது வழக்கம்; இணக்கம் இல்லையென்றால் பிரிகிறார்கள். ஆனால், இந்த விஷயத்திற்குத் தேவையில்லாமல் கை, கால், மூக்கு வைத்து இணையத்தில் பேசுகிறார்கள்.

திரிஷாவுடன் தொடர்பு, கீர்த்தி சுரேஷோடு தொடர்பு, அதனால்தான் மனைவி சங்கீதா பிரிந்தார் என்கிறார்கள். ஆனால், நடிகர் விஜய்யைப் பொறுத்தவரை அவரால் எங்கேயாவது ரகசியமாகச் செல்ல முடியுமா? தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகில் தமிழர்கள் வாழும் எந்த ஒரு மூலை முடுக்கிற்கும் அவரால் செல்ல முடியாது; சென்றால் உடனே மக்கள் கூடிவிடுவார்கள். ஆயிரம் மொபைல் போன் கேமராக்கள் அவரைச் சுற்றிச் சுற்றிப் படம் எடுக்கும். இந்த நிலையில் அவரால் எப்படி, அதுவும் திரிஷாவை ரகசியமாகச் சந்திக்க முடியும்? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், விஜய் மீது சேறு பூசப் பூச அவர் மேலும் மேலும் வளர்ந்து செல்கிறார் என்பதுதான் உண்மை.

இந்தச் சங்கீதா விவகாரத்தை எல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை. விஜய் மீது அவதூறு பரப்பி, தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள். இந்த வேலைகளை எல்லாம் யார் செய்கிறார்கள் என்பது மக்கள் அறிந்த விஷயமே.