Ads Top

FACT-CHECK வாயே திறக்காத சங்கீதா: லண்டனில் 5,000 கோடிக்கு சொந்தக்காரி- ஆனால் வாய் கூசாமல் எழுதும் ஊடகங்கள்

விவாகரத்து வேண்டும் என்று விஜய் மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்தது மட்டுமே உண்மை. ஆனால், தற்போது வெளியாகும் ஏனைய செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. அதாவது, வீட்டில் இடமில்லை என்றும், தங்குவதற்கு இடம் இல்லை என்றும் சங்கீதா வழக்கு தொடுத்ததாகக் கூறப்படும் செய்திகள், விஜய்யின் சொத்தில் பாதி பங்கு வேண்டும் என்ற தகவல் மற்றும் ஒரு நடிகையோடு விஜய்க்குத் தொடர்பு இருப்பதாகச் சங்கீதா கூறியது என இவை அனைத்திலும் எந்த ஓர் உண்மையும் இல்லை.

சங்கீதாவின் அப்பா லண்டனில் பெரும் கோடீஸ்வரர், அவரது சொத்து மதிப்பே 5,000 கோடி ரூபாய் வரும். இந்த நிலையில், சென்னையில் தங்குவதற்கு ஒரு வீடு இல்லை என்று சங்கீதா வழக்கு தொடுப்பாரா? இது சாத்தியமா என்று சிந்தித்துப் பார்த்தாலே, இந்தச் சில ஊடகங்கள் எத்தகைய பொய்களைப் பரப்புகின்றன என்பது புரிந்துவிடும். இது ஒருபுறம் இருக்க, விஜய்யின் சொத்தில் பாதி எனக்கு வேண்டும் என்று சங்கீதா வழக்கு தொடுத்திருப்பதாகக் கூறுவதிலும் எந்த ஓர் உண்மையும் இல்லை.

காரணம், சங்கீதாவுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் லண்டன் சென்று தாராளமாகத் தங்க முடியும். பிள்ளைகளை லண்டனுக்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்ள அவருக்குப் போதுமான சொத்துகள் இருக்கின்றன. இந்த நிலையில், சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான பல தகவல்களைப் பரப்பி வருகின்றன. நாளுக்கு நாள் ஆளுக்கொரு கதையை இஷ்டத்திற்கு எழுதி வருகிறார்கள். விஜய் தொடர்பாக எந்தச் செய்தியைப் போட்டாலும் அது 'ஹிட்' ஆகிவிடுகிறது, டி.ஆர்.பி (TRP) ரேட்டிங் எகிறுகிறது என்பதும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

தற்போது விஜய் NDA கூட்டணியில் இணைகிறார் என்றும், அவர் துணை முதலமைச்சர் ஆவார் என்ற செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. விஜய் கட்சி தொடங்கி, தனது சொந்த உழைப்பில் ஈட்டிய கோடிக்கணக்கான பணத்தைச் செலவிடுவது எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கவா? இல்லையே! இதனைச் சிந்தித்துப் பார்த்தாலே இவர்கள் எதைச் சொல்ல வருகிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்துவிடும்.

No comments:

Powered by Blogger.