உக்ரைனுக்குள் நுளைந்த ரஷ்ய உளவாளிகள்: F16 விமானங்களை தாக்கி அழிக்க திட்டம்


ரஷ்ய கூட்டமைப்பு பாதுகாப்பு சேவை (FSB) சார்பாக செயல்பட்ட இரண்டு உக்ரைன் குடிமக்களை SBU கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அவர்களின் பணி, மேற்கு நாடுகளிடமிருந்து உக்ரைன் பெற்ற எஃப்-16 விமானங்கள் மற்றும் போர் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ள தளங்களை அடையாளம் காண்பதாகும். 

"உக்ரைன் இராணுவ விமான நிலையத்திற்கு அருகில் ஒரு சிறப்பு நடவடிக்கையின் விளைவாக, எஃப்-16 விமானத்தின் புறப்பாட்டை புகைப்படம் எடுப்பதில் இரண்டு ரஷ்ய முகவர்கள் பிடிபட்டனர்" என்று உக்ரைன் பாதுகாப்பு சேவை அறிவித்துள்ளது. கைதிகள் பொல்டாவா பிராந்தியத்தின் க்ரெமென்சுக் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 21 வயதுடைய இரண்டு பேர் ஆவர்.

SBU-இன் கூற்றுப்படி, இந்த இளைஞர்களை  ஒரு ரஷ்ய பெண் FSB அதிகாரியால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அவர்களின் பணி விமான நிலையங்கள் மற்றும் விமான உள்கட்டமைப்பின் புளூ பிரின்டை சேகரிப்பதாகும், 

இது ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எளிதாக்கும். அவர்கள் தங்கள் பணியை செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்டத்தில் பிடிபட்டனர்.  இவர்களை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறது உக்ரைன் படை.


Post a Comment

Previous Post Next Post