One China policy: ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாக அனுரா தெரிவிப்பு- தமிழர்களின் நிலை என்ன ?


சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் தெரிவித்தார். அதவது தைவான் நாடு சீனாவுக்கு சொந்தம் என்று சீனா உரிமை பாராட்டுவதைக் கூட அனுரா ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விடையத்தில் அனுரா அமெரிக்காவுடன் முரன்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதனையே அவர் இலங்கையிலும் செய்ய விரும்புவார் என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? ஒரே இலங்கை தான் இதனுள் தமிழர்கள் அடங்கி வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அனுரா இருக்கிறா என்பது தெரியவில்லை. இதேவேளை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சீனாவில் உள்ள மக்கள் மண்டபத்தில் உள்நாட்டு நேரப்படி மாலை 5:00 மணிக்கு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. சீனாவின் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனித மேம்பாட்டில்  அடைந்துள்ள மகத்தான முன்னேற்றத்தில் இலங்கை மிகவும் மகிழ்ச்சியடைகிறது,  என்று அனுரா தெரிவித்துள்ளார்.

 "பல தசாப்தங்களாக இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்கு வகித்து வருகிறது, மேலும் இந்த விஜயம் நமது நாடுகள் மற்றும் மக்களின் பரஸ்பர செழிப்பை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்." என்றும் அனுரா தெரிவித்துள்ளார். 

Source : https://www.bbc.co.uk/news/world-asia-china-38285354

Post a Comment

Previous Post Next Post