Thalapathy 69: டிரெண்டாகும் விஜய்யின் நியூ லுக்..!

 


பொங்கல் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு நடிகர் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் காரணமாக தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்தார். விஜய் நடிப்பிப் வெளிவந்த 'கோட்' படம் பிரமாண்ட வெற்றியை தந்தது. 

தொடர்ந்து தான் கடைசியாக ஒப்புக் கொண்ட தளபதி69 படத்தில் மட்டும் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்படது. இப்படத்தை எச்.வினோத் இயக்க பூஜா ஹெக்டே, பாபி தியோல் நடிக்கின்றனர். இந்த படம் தெலுங்கில் பாலய்யா நடித்த படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. 

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் அதற்கு முன்னதாகவே படத்தை எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்க பூமி பூஜைகள நடந்து முடிந்த நிலையிலும், விஜய் கேரக்டருக்கான போஸ்டரோ, புகைப்படமோ வெளியாகவில்லை. 

இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் பொங்கல் கொண்டாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் விஜய்யின் புகைபடத்தை பார்த்த ரசிகர்கள், இது தான் தளபதி69 படத்தின் நியூ லுக் என்று டிரெண்டாக்கி வருகின்றனர். 

தல போல தளபதியும் சால் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பதாகவும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். 




Post a Comment

Previous Post Next Post