Posted in

ரசிகர்களுக்கு ஏமாற்றம்! அனுஷ்காவின் ‘காட்டி’ ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை ஆட்சி செய்த நடிகை அனுஷ்கா ஷெட்டி, தற்போது ‘காட்டி’ திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரமெடுத்துள்ளார். ஆனால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டி’ திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக தனித்து களமிறங்கியுள்ளார்.  இப்படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக, ‘காட்டி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால், தற்போது படத்தின் வெளியீட்டு தேதி யூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தொடர்ச்சியான வெளியீட்டு தேதி மாற்றங்கள், அனுஷ்காவின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், ‘காட்டி’ திரைப்படம் வெளியாகும் யூலை 11-ஐ ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Exit mobile version