ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றிய நகரில் நின்று செல்பி எடுத்த ஜெலன்ஸ்கி: கிறிஸ்மஸ் பரிசு என்று நக்கல்

Vladimir Putin has suffered a stinging humiliation on Christmas Day as Ukraine took full control of Kupyansk


கிறிஸ்மஸ் தினமான இன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகப்பெரிய அவமானத்தைத் தரும் வகையில், உக்ரைன் ராணுவம் மிக முக்கியமான 'குப்யான்ஸ்க்' (Kupyansk) நகரை முழுமையாகக் கைப்பற்றி அதிரடி காட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தத் தந்திரோபாய நகரைத் தனது படைகள் கைப்பற்றிவிட்டதாக புதின் உலக அரங்கில் தம்பட்டம் அடித்து வந்தார். ஆனால், இன்று ரஷ்ய ஆதரவு போர் ஊடகங்களே, புதினின் படைகள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகவும், இது 'மிகவும் மோசமான தோல்வி' என்றும் ஒப்புக்கொண்டுள்ளன. இது புதினின் ராணுவ வியூகத்திற்கு விழுந்த பேரிடியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தி உலகையே அதிரவைத்துள்ளது. அதில், "இன்று நாம் அனைவரும் ஒரே ஒரு கனவைப் பகிர்ந்து கொள்கிறோம், ஒரே ஒரு ஆசையை முன்வைக்கிறோம்... அந்த சர்வாதிகாரி (புதின்) ஒழியட்டும்!" என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். "உக்ரைனுக்கு அமைதி கிடைக்க நாம் போராடுகிறோம், பிரார்த்தனை செய்கிறோம்" என்றும் அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார். புதினின் மரணத்தை வெளிப்படையாக விரும்பும் ஜெலன்ஸ்கியின் இந்த பேச்சு, இரு நாடுகளுக்கும் இடையிலான பகையை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

இன்னொரு பக்கம், புதின் தனது ராணுவத் தளபதிகளால் ஏமாற்றப்பட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குப்யான்ஸ்க் நகரை வென்றதாகக் கூறி 58 வயதான ஜெனரல் செர்ஜி குசோவ்லெவ் என்பவருக்கு ரஷ்யாவின் உயரிய 'Hero of Russia' விருதை புதின் வழங்கியிருந்தார். ஆனால், தற்போது அந்த வெற்றி வெறும் பொய் எனத் தெரியவந்துள்ளதால், அந்தப் போலி வெற்றிக்காக வழங்கப்பட்ட விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை ரஷ்யாவிற்குள்ளேயே வலுத்து வருகிறது. தனது தளபதிகள் தவறான தகவல்களைத் தந்து தன்னை நம்பவைப்பதாக புதின் தற்போது கடும் கோபத்தில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்காவது ஆண்டை எட்டப்போகும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகள் புளோரிடாவில் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கிழக்கு உக்ரைனில் ஒரு 'ராணுவமற்ற மண்டலத்தை' (Demilitarised Zone) உருவாக்க ஜெலன்ஸ்கி முன்வந்துள்ளார். போர்க்களத்தில் ஒரு பக்கம் உக்ரைன் முன்னேறி வந்தாலும், மறுபக்கம் அமைதிக்கான கதவுகளையும் ஜெலன்ஸ்கி திறந்து வைத்துள்ளார். கிறிஸ்மஸ் நாளில் நிகழ்ந்துள்ள இந்தத் திருப்புமுனை, ரஷ்ய-உக்ரைன் போரின் போக்கையே மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Post a Comment

Previous Post Next Post