பயத்தில் வெள்ளைக் குடை பிடித்த ஸ்டாலின்: நரேந்திர மோடி சொன்ன கதை இதுதான்

 


கடுமையான வெயில் இல்லாட்டி மழைன்னா குடை பிடிக்கிறது சாதாரண விஷயம் தான். ஆனா, வெயிலுக்குப் போயிட்டு எவனாவது வெள்ளைக் குடை பிடிப்பானா? அதுவும் அனல் ஊடுருவக்கூடிய டிரான்ஸ்பரன்ட் குடையைப் போய் யாராவது பிடிப்பாங்களா? அந்த அளவுக்கு நரேந்திர மோடி மேல நம்ம சி.எம் சாருக்கு பயம்! கறுப்புக் குடை பிடிச்சா, எங்கே தான் அவருக்கு எதிரா போராட்டம் நடத்துறதா மோடி நினைச்சிருவாரோன்னு பயந்து, தேடிப் பிடிச்சு அந்த வெள்ளைக் குடையை வாங்கிட்டு வந்து பிடிச்சிருக்காருன்னா பாருங்களேன்!

இந்த வெள்ளைக் குடை பிடித்த விவகாரத்தை, மோடி மிக சூசகமாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்றால், யோசிக்க வேண்டிய விடையம். "பாஜக தமிழ்நாட்டுக்குள்ள வருது, நாங்க மோடியை எதிர்க்கிறோம், மதவாதத்தை மோடி தூண்டுறாரு, மத்திய அரசு எங்களை வஞ்சிக்கிது" அப்படின்னு பல மேடைகள்ல பேசிட்டு வர்ற சி.எம் சார், ஒரு சின்ன எதிர்ப்பைக் கூட மோடிகிட்ட நேர்ல காட்டத் தயங்குறது ஏன்? இதைத்தான் த.வெ.க தலைவர் விஜய் அன்னைக்கு மேடையில சொல்லியிருந்தாரு: 

"இவங்க அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்குவாங்களாம்... ஆனா அடியில ரெண்டு பேரும் தக்ஸ்... நல்ல நண்பர்கள் தான்"னு. இந்த வெள்ளைக் குடை விவகாரம் இப்பதான் இணையத்துல செம சூடு பிடிச்சிருக்கு. "ஐயா சி.எம் சார், எதுக்காக வெள்ளைக் குடையைக் கொண்டு போனீங்க?"ன்னு நெட்டிசன்கள் கேள்வி மேல கேள்வி கேட்டு கிழிச்சுக் தொங்க விடுறாங்க. "உங்களுக்கு மோடி மேல இவ்வளவு பயம் இருந்தா, ஏன் சார் நீங்க அரசியல் பண்றீங்க?"ன்னும் கேட்டு வச்சுச் செய்றாங்க.

இந்தியாவோட பல மாநிலங்கள்ல பாஜக அல்லாத ஆட்சி நடக்குது. அங்கே மோடி போகும்போது சில எதிர்க்கட்சிகள், ஏன் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட தங்களோட கறுப்புக்கொடி எதிர்ப்பைப் பிரதமருக்குக் காட்டியிருக்காங்க. அதுல மம்தா பானர்ஜி ஒரு முக்கியமான ஆளு. ஆனா, நம்ம சி.எம் சாரால மட்டும் ஏன் முடியல? அப்படின்னா உங்க ரெண்டு பேருக்கும் பின்னாடி என்ன உறவு இருக்கு? இது மில்லியன் டாலர் கேள்விதான். ஆனா இதுக்கான பதில் 2026 ஏப்ரல்ல தெரிஞ்சுடும்!

Post a Comment

Previous Post Next Post