கைதாகி கம்பி எண்ணும் டக்ளஸ் தேவானந்தாவை, விடுதலைப் புலிகள் மகரகம சிறைச்சாலையில் வைத்து கொலை செய்யப் போகிறார்கள், அவருக்கு பெரிய ஆபத்து உள்ளது என்று முன்னாள் MP சுரேன் ராகவன் பெரும் கவலை தெரிவித்துள்ளார். இது எல்லாம் நடக்கிற காரியமா பாஸ்? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? என்று சமூக வலைத்தளங்களில் சிலர் சுரேனை கிழி கிழி என்று கிழிக்கிறார்கள்.
டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் தனது அரசியல் எதிரிகளால், குறிப்பாக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 10-க்கும் மேற்பட்ட தாக்குதல் முயற்சிகளில் இருந்து தப்பியவர் என்றும்,
ஆயிரம் பேர் மட்டுமே இருக்க வேண்டிய மகர சிறைச்சாலையில் தற்போது 3,000-க்கும் அதிகமான கைதிகள் இருக்கின்றனர் என்றும், இது டக்ளசின் பாதுகாப்பை சீர்குலைக்கிறது என்றும் குரைத்துள்ளார் (சீ... தப்பாக எழுதி விட்டோம்) கூறியுள்ளார் சுரேன் ராகவன்
இத்தகைய நெருக்கடியான சூழலில் அவரை வைத்திருப்பது அவரது உயிற்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம். “அவர் தவறு செய்திருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுங்கள், ஆனால் அவருக்கு வழங்கப்பட வேண்டிய முழுமையான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
