எங்களிடம் எத்தனை தற்கொலை படகுகள் உள்ளது தெரியுமா என வீடியோ வெளியிட்ட ஈரான் (VIDEO)
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தளபதி ஃபதாவி கூறுகையில், "எங்களிடம் வினாடிக்கு 100 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய Underwater missiles உள்ளன, இவை உலகின் எந்தவொரு பாதுகாப்புக் கட்டமைப்பையும் ஊடுருவும் திறன் கொண்டவை" என்று சவால் விடுத்துள்ளார். இந்தத் தொழில்நுட்பம் ரஷ்யா மற்றும் ஈரானிடம் மட்டுமே இருப்பதாகக் கூறிய அவர், ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறாவிட்டால் பாரசீக வளைகுடாவை ரத்தக் காடாக மாற்றுவோம் என்று எச்சரித்துள்ளார். ஈரானின் இந்தத் தொடர் மிரட்டல்கள் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயரத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், ஈரானின் தாக்குதல்கள் அண்டை நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள முஹராக் தீவில் (Muharraq Island) உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல், துபாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மீது விழுந்த ஏவுகணைச் சிதறல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போரினால் மத்திய கிழக்கு நாடுகளின் Civilian security மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.
மற்றொரு பரபரப்பான செய்தியாக, துபாயில் விடுமுறைக்காகச் சென்ற 60 வயது பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர், ஈரானிய ஏவுகணைகளைத் தனது கைபேசியில் படம்பிடித்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயின் சைபர் குற்றச்சட்டம் (Cyber crime) படி, வதந்திகளைப் பரப்புவதும், இத்தகைய தாக்குதல்களைப் படம்பிடிப்பதும் கடுமையான குற்றமாகும். இதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. போர்க்களத்தில் நிலவும் இந்த Dramatic developments காரணமாகப் பல நாடுகள் தங்கள் குடிமக்களை மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளன.

No comments: