அமெரிக்காவில் 2026-ம் ஆண்டு இறுதியில் இடைக்காலத் தேர்தல் (Midterm Elections) நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தனது குடியரசுக் கட்சி (Republicans) தோல்வியடைந்தால், எதிர்க்கட்சியினர் தன்னை மீண்டும் 'impeach' (பதவி நீக்கம்) செய்ய முயல்வார்கள் என்று டிரம்ப் அஞ்சுகிறார்.
டிரம்பின் இந்தப் பேச்சு அவர் ஜனநாயக முறையிலான தேர்தலை ரத்து செய்யப் போகிறாரோ என்ற அச்சத்தை எதிர்க்கட்சியினரிடையே உருவாக்கியுள்ளது. குறிப்பாக, மினசோட்டா போன்ற மாநிலங்களில் நிலவும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த அவர் 'Insurrection Act'-ஐப் பயன்படுத்தப் போவதாக மிரட்டியிருப்பதும், தேர்தலைத் தள்ளிவைக்க அல்லது ரத்து செய்ய அவர் ஏதேனும் ஒரு நெருக்கடி நிலையை (Emergency) சாக்காகப் பயன்படுத்துவார் என்று ஜனநாயகக் கட்சியினர் எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt), "அதிபர் கிண்டலாகத்தான் (facetiously) அப்படிச் சொன்னார், உண்மையில் தேர்தலை ரத்து செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க சட்டப்படி, ஒரு அதிபர் நினைத்தாலும் தேர்தலைத் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது. தேர்தலைத் தள்ளிவைக்கும் அதிகாரம் காங்கிரஸிடமே உள்ளது. இருந்தபோதிலும், டிரம்ப் தொடர்ந்து இத்தகைய கருத்துக்களைக் கூறி வருவது அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பிற்கு விடப்பட்ட ஒரு சவாலாகவே 'political analysts' கருதுகின்றனர்.
source : https://www.mirror.co.uk/news/politics/donald-trump-says-we-shouldnt-36558807
