அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்புக்கு முன்பே உலக நாடுகளை அதிரவைக்கும் ஒரு மெகா உத்தரவை பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை (National Security) பலப்படுத்தும் நோக்கில், சுமார் 75 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அங்கு குடியேறுவதற்கு (Immigration) அதிரடியாகத் தடை விதித்துள்ளார். இந்த அதிரடிப் பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகள் சிக்கியுள்ள நிலையில், இந்தியாவுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 21 முதல் அமல்: அமெரிக்க அரசின் இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 21 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. இதன்படி, தெற்காசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 75 நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு நிரந்தரமாகக் குடியேற வருபவர்களுக்கு Immigrant Visa வழங்குவது காலவரையறையின்றி நிறுத்தப்படுகிறது. தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்தே இந்த "பிளாக் லிஸ்ட்" (Blacklist) தயாரிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு மட்டும் ஸ்பெஷல் ரூட்? இந்த உத்தரவால் உலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில், இந்தியாவின் பெயர் இந்த தடைப் பட்டியலில் இடம்பெறவில்லை. ஒருவேளை இந்தியர்கள் மீது ட்ரம்ப் கை வைத்திருந்தால், அது மிகப்பெரிய ராஜதந்திர மோதலுக்கு (Diplomatic Conflict) வழிவகுத்திருக்கும். தற்போது இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், வேலை (Work Visa), கல்வி மற்றும் குடும்ப ரீதியாக அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது.
அண்டை நாடுகளுக்குப் பலத்த அடி: இந்தத் தடையால் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகள் நிலைகுலைந்து போயுள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் "அமெரிக்கக் கனவு" இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவு, சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் இந்த "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" (America First) கொள்கை, மற்ற நாடுகளுடனான உறவில் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
