நேற்று இரவு நடைபெற்ற 83-வது கோல்டன் குளோப் விருதுகள் (Golden Globes 2026) விழாவில், ஹாலிவுட்டின் இளம் சூப்பர் ஸ்டார் திமோதி சாலமே (Timothée Chalamet) செய்த சாதனை இப்போது உலக அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
'மார்டி சுப்ரீம்' (Marty Supreme) படத்தில் டேபிள் டென்னிஸ் வீரராக நடித்து அசத்திய திமோதி, 'சிறந்த நகைச்சுவை நடிகர்' விருதைத் தட்டிச் சென்றுள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால், இதே பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருந்த 'டைட்டானிக்' நாயகன் லியோனார் -டோ -டி-காப்ரியோ மற்றும் ஜார்ஜ் குளூனி போன்ற ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி திமோதி இந்த விருதை வென்றதுதான். 30 வயதே ஆகும் திமோதிக்கு இது முதல் கோல்டன் குளோப் விருது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதை வாங்க மேடைக்கு வந்த திமோதி, தனது காதலியும் பிரபல மாடலுமான கைலி ஜென்னருக்கு (Kylie Jenner) "I love you" என்று சொல்லி அன்பு மழையைப் பொழிந்தார். இது அங்கிருந்த கேமராக்களை எல்லாம் அவர் பக்கம் திருப்பியது. டிகாப்ரியோ தனிப்பட்ட முறையில் விருது வாங்கவில்லை என்றாலும், அவர் நடித்த 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) திரைப்படம் மொத்தம் 4 விருதுகளை அள்ளிச் சென்று விழாவின் 'மாஸ்' ஹிட் படமாக உருவெடுத்தது.
சிறந்த திரைப்படம் (Musical or Comedy), சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை என முக்கியமான பிரிவுகளில் இந்தப் படம் ஆதிக்கம் செலுத்தியது.மறுபுறம், சிறந்த நாடகத் திரைப்படத்திற்கான (Best Drama Film) விருதை 'ஹாம்நெட்' (Hamnet) திரைப்படம் வென்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தது.
அந்தப் படத்தில் சிறப்பாக நடித்த ஐரிஷ் நடிகை ஜெஸ்ஸி பக்லி (Jessie Buckley) 'சிறந்த நாடக நடிகை' விருதை வென்றார். இந்த வருடம் கோல்டன் குளோப் விருதுகளில் பழைய ஜாம்பவான்களை விட, திமோதி சாலமே போன்ற இளம் தலைமுறையினரின் கை ஓங்கியிருப்பதாக ஹாலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன. ஆஸ்கர் விருதுகளுக்கு முன்னால் நடக்கும் இந்த 'அலப்பறை'யால், அடுத்து நடக்கப்போகும் ஆஸ்கர் பந்தயத்திலும் திமோதி மற்றும் 'ஹாம்நெட்' படத்திற்குப் பெரிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
Source: News Page: BBC News / The Guardian
URL:


