தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய்யின் Tamilaga Vettri Kazhagam (TVK) கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் 'Whistle' (விசில்) சின்னத்தை ஒதுக்கியுள்ளது. தனது திரையுலகப் பயணத்தில் பல ஹிட் பாடல்களில் விசிலை ஒரு அடையாளமாக மாற்றிய விஜய், இப்போது அதே விசிலை அரசியல் ஆயுதமாக மாற்றியுள்ளார். ஆங்கிலத்தில் 'Whistleblower' என்றால் அதிகார மட்டத்தில் நடக்கும் தவறுகளையும் ஊழல்களையும் துணிச்சலுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர் என்று பொருள். அந்த வகையில், விஜய் ஒரு உண்மையான Whistleblower-ஆக இருந்து தமிழக அரசியலில் நிலவும் ஊழல்களைத் துடைத்தெறிவார் என அவரது தொண்டர்கள் பெரும் நம்பிக்கையில் உள்ளனர்.இந்த விசில் சின்னம் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள ஒரு Common Free Symbol ஆகும். தற்போது அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியாக (Registered Unrecognised Party) இருக்கும் TVK, தேர்தலுக்குப் பிறகு ஒரு நிரந்தரச் சின்னத்தைப் பெற முக்கியமான இலக்கு ஒன்றை எட்ட வேண்டும். தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டுமானால், குறைந்தது 6% வாக்கு வங்கியை (Vote Share) நிரூபிக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சட்டமன்ற இடங்களை வெல்ல வேண்டும்.
வெற்றிக்குப் பிறகு 5% அல்லது அதற்கு மேலான வாக்குகளைப் பெற்றுத் தனது பலத்தை நிரூபித்தால், தளபதி விஜய் தனது கட்சிக்கு ஒரு தனித்துவமான நிரந்தரச் சின்னத்தை (Permanent Symbol) உருவாக்கி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க முடியும். அதன் பிறகு அந்த சின்னம் TVK கட்சிக்கே உரித்தான Reserved Symbol-ஆக மாறிவிடும். தற்போது கிடைத்துள்ள விசில் சின்னம், விஜய்யின் சினிமா செல்வாக்கையும் அரசியல் இலக்கையும் இணைக்கும் ஒரு பாலமாகப் பார்க்கப்படுகிறது.
"விசில் போடு" என்று திரையில் சொன்ன விஜய், இப்போது தேர்தல் களத்தில் ஊழலுக்கு எதிராக விசில் ஊதத் தயாராகிவிட்டார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கொள்கையுடன் களமிறங்கியுள்ள TVK, இந்த விசில் சத்தத்தின் மூலம் தமிழக அரசியலில் ஒரு பெரிய Impact-ஐ ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாகத் தேர்தல் களத்தைச் சந்திக்கும் விஜய்க்கு இந்தச் சின்னம் ஒரு Lucky Factor-ஆக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.