Chennai 7:am : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அதிகாலை (7.00AM)சென்னை இல்லத்தில் இருந்து புறப்பட்டார். தனி விமானம் (Chartered Flight) மூலம் புதுடெல்லிக்குப் புறப்பட இருக்கிறார். தற்போது அவரது கார், சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டு இருகிறது. . கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் (Karur Stampede Case) தொடர்பான விசாரணைக்காக, சிபிஐ (CBI) அவருக்குச் சம்மன் அனுப்பியிருந்தது.
அரசியல் ரீதியாகப் பார்க்கும்போது, 2026 தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில் விஜய்யின் இந்த டெல்லி பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு அவர் இன்று மாலையே மீண்டும் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.