ஏன் இப்படி இடிப்பது போல போகிறாய் ? என்று கேட்டதால் இரட்டைக் கொலை- திருவள்ளூரில் சம்பவம் !


திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் அருகே நள்ளிரவில் நடந்த இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியெடுத்துள்ளது. கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல், எந்தவித ஈவுஇரக்கமும் இல்லாம ரெண்டு பேரைச் சரமாரியாகக் கல்லால் அடித்துக் கொலை செஞ்சிருக்காங்க. இந்த பயங்கர சம்பவம் நள்ளிரவு நேரத்துல நடந்திருக்கு.

திருவள்ளூரைச் சேர்ந்த பார்த்திபன் (32), கேசவமூர்த்தி (25) மற்றும் சுகுமார் (31) ஆகிய மூணு பேரும் பொங்கலுக்காக ஆந்திரா போயிட்டுத் திரும்பியிருக்காங்க. மணவாளநகர்ல ஒரு டீ கடையில இவங்க பேசிட்டு இருந்தப்போ, அங்கே ரெண்டு பசங்க படு வேகமாக மோட்டார் பைக்ல வந்துருக்காங்க. "ஏன் இடிக்கிற மாதிரி வர்றீங்க?"ன்னு இவங்க கேக்க, அந்த ரெண்டு பேரும் பைக்கை நிறுத்திட்டு இவங்ககூட வாக்குவாதத்துல இறங்கியிருக்காங்க. அது கைகலப்பா மாறவே, அந்த ரெண்டு பேரும் உடனே அங்கிருந்து நழுவியிருக்காங்க.

ஆனா அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம பார்த்திபன், கேசவமூர்த்தி மற்றும் சுகுமார் ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு இரவு 10:30 மணி போல வெளில வந்திருக்காங்க. 

அங்கே மேலும் ரெண்டு பேரைத் தயார் செஞ்சுட்டு வெயிட் பண்ண அந்த கஞ்சா கும்பல், இவங்களைச் சரமாரியாத் தாக்கியிருக்கு. இதில் மூணு பேர் தலையிலயும் பலத்த காயம் ஏற்பட, பார்த்திபன் ஸ்பாட்லயே உயிரிழந்தார். சுகுமார் மற்றும் கேசவமூர்த்தி ஆகிய ரெண்டு பேரையும் மக்கள் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போன நிலைல, அங்கே சுகுமார் உயிரிழந்தார். கேசவமூர்த்தி இப்போ ஆபத்தான நிலைல உயிருக்குக் போராடிட்டு வர்றார்.

கஞ்சா போதையில் இருந்த அந்த இளைஞர்கள் இப்படி கோரத் தாண்டவம் ஆடுவாங்கன்னு யாரும் எதிர்பார்க்கல. போலீஸ் தனிப்படை அமைச்சுக் தேடியதுல, ஜவகர் (23), வினோத்குமார் (36), ஜோதிஷ் (34) மற்றும் நீலகண்டன் (30) ஆகியோரைத் தூக்கியிருக்காங்க. 

இந்த கொலைச் சம்பவம் ரெண்டு குடும்பத்தையே நிலைகுலைய வச்சிருக்கு. உயிரிழந்த பார்த்திபனுக்கு 2 வயசுல ஒரு குழந்தை இருக்கிற நிலைல, பலியான சுகுமாரோட மனைவி 8 மாசக் கர்ப்பிணியா இருக்கிறது அந்த ஏரியா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கு. 

கஞ்சா போதையில நடந்த இந்த அராஜகத்தைக் கண்டிச்சு 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்ல இறங்குனதுல அந்தப் பகுதியே ஸ்தம்பிச்சுப் போச்சு. போலீஸ்காரங்க வந்து உரிய நடவடிக்கை எடுப்போம்னு உறுதி கொடுத்த பிறகுதான் மக்கள் கலைஞ்சு போனாங்க.

Post a Comment

Previous Post Next Post